வசந்தபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்: ராஜேஷ்குமார் எம்.பி., திறப்பு

வசந்தபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்:  ராஜேஷ்குமார் எம்.பி., திறப்பு
X

வசந்தபுரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

வசந்தபுரம் கிராமத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடத்தை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

வசந்தபுரம் கிராமத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடத்தை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில், அவர்களின் வசதிக்காக புதிய ரேஷன் கடைகள் துவக்கப்பட்டு வருகின்றன. குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் துவக்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் பஞ்சாயத்தில் பொதுமக்களின் பங்களிப்போடு கட்டப்பட்ட புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு முன்னிலை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. விழாவில் கலந்துகொண்டு, புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அட்மா தலைவர் பழனிவேல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், ஒன்றிய பொருளாளர் கணேசன், கிளை செயலாளர்கள் முத்துசாமி, ஜெய்சங்கர், புஷ்பராஜ், பெருமாள், சேகர், இளைஞர் அணி பூபதி, ஸ்டாலின் உள்ளிட்ட திரளான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story