வரும் 15ம் தேதி நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகவிழா
நாமக்கல் பலபட்டரை மாரியம்மன்
நாமக்கல் மெயின் ரோட்டில், அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதையொட்டி மகா கும்பாபிஷேக விழா வருகிற 13ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது.
தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோம் நடைபெறும். 9.30 மணிக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவர மோகனூர் காவிரி ஆற்றிற்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 1 மணிக்கு பக்தர்கள் காவிரியில் புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன், நாமக்கல் ஐயப்பன் கோயிலில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைவார்கள். மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கும்.
14ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். பகல் 12.40 மணிக்கு கோபுர கலசம் வைத்தம் மற்றும் அம்மன் பிரதிஷ்டை நடைபெறும். மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை துவங்கும். காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடைபெற்று, அதிர்வேட்டு முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, 7.40 மணிக்கு கோயில் கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
பின்னர் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, மகா அபிசேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் இளங்கோவன், செல்வராஜ், லட்சுமி, கதிரேசன், செயல் அலுவலர் வினோதினி, திருப்பணிக்குழு நிர்வாகிகள் விஎம்ஆர் மணி, பாலசுப்ரமணியம், சரவணன் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu