கோடையில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நாமக்கல் நகராட்சி வேண்டுகோள்
பைல் படம்
கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் நகரட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின், குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றை நீர் ஆதராமாகக் கொண்டு 2 குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. மோகனூர் மற்றும் ஜேடர்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம், தினசரி 19 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகராட்சிப் பகுதியில் உள்ள 20 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரைக்கொண்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நாமக்கல் நகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது கோடை காலம் என்பதால் பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu