நாமக்கல் மாவட்டத்தில் இன்று 54 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 54   மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 54 மையங்களில், இன்று 10,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 54 மையங்களில், இன்று 10,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவனை போடப்படுகிறது.

இன்று நடைபெறும் முகாமில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் போடப்படும். கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடும் மையங்கள்விபரம்:

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: முனியப்பனூர், திம்மநாய்க்கன்பட்டி, சாலக்காடு அரசு தொடக்கப்பள்ளிகள்.

சேந்தமங்கலம் வட்டாரம்: வெட்டுக்காடு, காந்திபுரம் அரசு தொடக்கப்பள்ளிகள், தொட்டிப்பட்டி சுகாதார மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: பீமநாய்க்கனூர் முத்துகாப்பட்டி அரசு பள்ளிகள், வரகூர் வித்யாமந்திர் பள்ளி, சிங்களங்கோம்பை அங்கன்வாடி மையம்.

மோகனூர் வட்டாரம்: எஸ்.வாழவந்தி, ஒருவந்தூர் அரசு தொடக்கப்பள்ளிகள், காட்டுப்பிள்ளையார் கோவில் சுகாதார மையம், என்.புதுப்பட்டி மினி கிளினிக்.

நாமக்கல் வட்டாரம்: பெரியகவுண்டம்பாளையம், செங்காளிகவுண்டனூர், சின்னமுதலைப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிகள்.சிவியாம்பாளையம் அருந்ததியர் காலனி, எர்ணாபும் ஆரம்ப சுகாதா நிலையம்(இரண்டாவது தவனை மட்டும்)

திருச்செங்கோடு வட்டாரம்: காங்கேயயம்பாளையம், கோரக்குட்டை, புதுப்புளியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளிகள், நெசவாளர் காலனி உயர்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சி தைலாம்பிகை நகர் விநாயகர் கோயில்.

பள்ளிபாளையம் வட்டாரம்: குமாரபாளையம் மாரக்கால்காடு ஆரம்ப சுகாதார நிலையம், குப்பாண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி, சவுதாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரட்டான்காசடு ஆர்.எஸ்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

வெண்ணந்தூர் வட்டாரம்: சவுரிபாயைம் சர்ச், கிழக்கு வலசு, மலையம்பாளையம் தொடக்கப்பள்ளிகள்.

இராசிபுரம் வட்டாரம்: பெரும்பாளி தொடக்கப்பள்ளி, பட்டணம் சிவசக்தி பள்ளி, சி.எஸ்.புரம் சுகாதார நிலையம், சுப்பராயம் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி.

புதுச்சத்திரம் வட்டாரம்: கரடிப்பட்டி, காரைக்குறிச்சிப்புதூர், கண்ணூர்பட்டி அரசு தொடக்கப்பள்ளிகள், தொட்டிபாளையம் சுகாதர மையம்.

எலச்சிபாளையம் வட்டாரம்: கருமகவுண்டம்பாளையம், இடையார்பாளையம் தொடக்கப்பள்ளி, வேலகவுண்டம்பட்டிஅரசு உயர்நிலைப்பள்ளி.

மல்லசமுத்திரம் வட்டாரம்: அம்பேத்கார்தெரு, கரட்டுப்பாளையம், முஞ்சனூர் அரசு தொடக்கப்பள்ளி.

பரமத்தி வட்டாரம்: சித்தம்பூண்டி, ஜெகநாய்க்கன்பட்டி, வெட்டுக்காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளிகள், சீராப்பள்ளி சமுதாயக்கூடம்.

கபிலர்மலை வட்டாரம்: செல்லப்பம்பாளையம், சிறுபுலம்பாளையம், சானார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிகள்.மேற்கண்ட மையங்களில் 10,500 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது.

Tags

Next Story