நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்
X

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி (பைல் படம்)

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்-மோகனூர் மெயின் ரோட்டில், அணியா புரத்தில், தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு மோகனூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஏடிஎம் மையத்தை கண்காணித்தனர்.

அப்போது ஏடிஎம் மையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரனை நடத்தினார். விசாரணையில் அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.

அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார் அவரிடம் தீவி விசாரனை நடத்தினார்கள். அப்போது அவர் பீகார் மாநிலம் கிழக்கு சாம்ரான் பகுதியைச் சேர்ந்த உபேந்தராராய் (28) என்பதும்,

அவர் பரளியில் உள்ள ஒரு கோழித்தீவன ஆலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏடிஎம்இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து ஏடிஎம் மையத்தின் பொறுப்பாளர் கணக்கம் பானையத்தை சேர்ந்த மோகன் குமார் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உபேந்தராராயை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!