நாமக்கல்லில் 75க்கும் மேற்பட்ட நாதகவினர் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல்லில் 75க்கும் மேற்பட்ட நாதகவினர்  ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
X

பட விளக்கம் : நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் வக்கீல் வினோத்குமார், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பிக்கு மாலை அணிவித்து, தனது ஆதரவாளர்களுடன் திமுகவின் இணைந்தார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் உள்ளிட்ட 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாமக்கல்லில் 75க்கும் மேற்பட்ட நாதகவினர் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் உள்ளிட்ட 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த வக்கீல் வினோத் குமார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான மீது பல்வேறு புகார்களைக் கூறி, சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகினார். அவருடன் நாதக முன்னாள் நகர செயலாளர் செந்தில், மகளிர் பாசறை செயலாளர் வள்ளி உள்ளிட்ட சுமார் 75க்கும் மேற்பட்டோர் நாதகவில் இருந்து விலகினார்கள். அவர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி. முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்றார். அவர்களுக்கு திமுகவின் உறுப்பினர் அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாநகராட்சி மேயர் கலாநிதி, நகர செயலாளர்கள் சிவகுமார், ஆனந்தன், மோகனூர் ஒன்றிய செயலாளர் நவலடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
குழந்தைகளின் இதயத்தை தாக்கும் கவாசாகி நோய் – காரணங்கள் மற்றும் தீர்வுகள்!