மோகனூர் காந்தமலை முருகன் கோயில் தைப்பூசத் தேர்த்திருவிழா கோலாகலம்

மோகனூர் காந்தமலை முருகன் கோயில் தைப்பூசத் தேர்த்திருவிழா கோலாகலம்
X

மேகனூர் காந்தமலை பாலசுப்ரமணியம் சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத் திருத்தேர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத் திருத்தேர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நகரில் உள்ள காந்தமலையில், குன்றின்மீது ஸ்ரீ பாலசுப்ரமணியசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழனியைப் போலவே இத்தலத்தில் முருகன் மேற்குநோக்கி காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த 16ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கியது. 17ம் தேதி காலை சிறப்பு பூஜைகளுடன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 10 மணிக்கு அபிசகே ஆராதனைகளும், மாலையில் அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியில் நடைபெற்றது, 23ம் தேதி, காலை சிறப்பு அபிசேகம் மற்றும் மாலை சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. 24ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.

இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, காலை 10 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவம் முருகன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை 26ம் தேதி காலை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சத்தாபரணம் நடைபெறும்.

27ம் தேதி விடையாற்றி உற்சவம், 28 ம் தேதி மதியம் அன்னதானம், 29ம் தேதி காவடி ஊர்வலம் நடைபெறும். கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு, டாக்டர் குழந்தைவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நவலடி உள்ளிட்ட திரளானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். மோகனூர் ரோட்டரி கிளப் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

Tags

Next Story