லாரி ஒர்க்ஷாப் இயந்திரங்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன் உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற, லாரி ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சிறுதொழில் வளர்ச்சி வங்கி துணைப் பொது மேலாளர் ரஜிவ் பேசினார்.
நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்ஷாப்ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், லாரி பட்டறை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சென்னிமலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சங்க செயலாளர் விஜயகுமார், பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) துணைப் பொது மேலாளர் ரஜிவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
நாமக்கல் பகுதியில் ஏராளமான லாரி பாடி பட்டறைகள், பெயிண்ட் பட்டறைகள், லேத் பட்டறைகள், ட்ரெய்லர் பட்டறைகள், டேங்க் பட்டறைகள், வெல்டிங் பட்டறைகள், ஸ்பிரிங் பட்டறைகள், டிங்கர் பட்டறைகள், சேசிஸ் பட்டறைகள், மெக்கானிக் பட்டறைகள், கண்ணாடி கடைகள் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. இவற்றை நம்பி நூற்றுக்கணக்கான உரிமையாளர்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப லாரி பட்டறைகளை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சிறுதொழில் வளர்ச்சி வங்கி உதவ முன்வந்துள்ளது. லாரி பட்டறைகளுக்கு தேவையான நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கு சிறுதொழில் வளர்ச்சி வங்கி மூலம் எளிய முறையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
பட்டறை உரிமையாளர்கள் தங்களின் திட்ட அறிக்கையுடன் கடன் விண்ணப்பங்களை அளித்தால், அவற்றை பரிசீலனை செய்து, எவ்விதமான அடமானமும் இல்லாமல், தகுதியான பட்டறை உரிமையாளர்களுக்கு விரைவாக கடன் வழங்கப்படும். இந்த வாய்ப்பை சிறு மற்றும் குறுந்தொழில் செய்து வரும் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். திரளான லாரி பட்டறை உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu