பேட்டப்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு

பேட்டப்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு
X

பைல் படம் 

பேட்டப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், ஒற்றுமையை வளர்ப்போம் என்ற உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி என்பது அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை என்ற தொலைநோக்குப் பார்வையில், எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதியுடன் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிவது, பள்ளியில் சேர்ப்பது, சிறப்பு கல்வி அளிப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்செயல்பாடுகள் அனைத்தும், கடைநிலை பயனாளர்களான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில், மாநில, மாவட்ட, வட்டார மற்றும் பள்ளிகள் அளவில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மாதத்தின் முதல் திங்கள்கிழமை தோறும், ஒற்றுமையை வளர்ப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி, மோகனூர் தாலுகா, பேட்டப்பாளையம் பஞ்சாயத்து, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமையாசிரியர் ஜோதி தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு தலைவர் வினிதா, உதவி ஆசிரியர் பாப்பாத்தி, சிறப்பு பயிற்றுனர் ஆனந்தகுமார் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது