நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் ஜெயந்தினி பேசினார்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில், மாவட்ட தொழுநோய் மருத்துவப் பணிகள் துறை மற்றும் கல்லூரி ரெட்கிராஸ் சொசைட்டி, ரெட்ரிப்பன் கிளப் சார்பில், தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் ஜெயந்தினி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தொழுநோய் அறிகுறிகள், ஆரம்பகால சிகிச்சை முறைகள், தொழு நோயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொழு நோயினால் பாதித்தவர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.
மேலும், மாணவ, மாணவியர் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்தும் நிகழ்ச்சியில் விளக்கிக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவியருக்கு தோல் பரிசோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் திருப்பதி வெங்கடாசலபதி, புவனேஸ்வரன், செல்வராஜா, வேல்முருகன், பழனிச்சாமி, கல்லூரி ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி மற்றும் ரெட்ரிப்பன் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu