/* */

திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் : எம்எல்ஏ. ஈஸ்வரன் உறுதி

திருச்செங்கோட்டில் நடைபெற்ற கண்ணகி விழாவில், திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகிக் கோட்டம் அமைக்கப்படும் என்று எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி  கோட்டம் : எம்எல்ஏ. ஈஸ்வரன் உறுதி
X

திருச்செங்கோட்டில் நடைபெற்ற கண்ணகி விழாவில், நாமக்கல் எம்.பி. சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோட்டில், வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 66-ம் ஆண்டு கண்ணகி விழா, கைலாசநாதர் கோயில், சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது.

கண்ணகி விழாக்குழு தலைவர், திருச்செங்கோடு எம்எல்ஏ இ.ஆர். ஈஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி சின்ராஜ், முன்னாள் அமைச்சரும், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி, திமுக செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ் பாபு, வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், பி.ஆ.டி. நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருச்செங்கோடு மலையில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் பேசினர். விரைவில் கண்ணகி கோட்டம் அமைக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்தார்.

விழாவில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று, நடனமாடியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனிதாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் நதி ராஜவேல் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார்.

Updated On: 6 Jun 2023 7:30 AM GMT

Related News