நாமக்கல்லில் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு விழா

நாமக்கல்லில் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு விழா

நாமக்கல்லில் நடைபெற்ற சர்வதேச காது கேளாதோர் தின விழாவில், சைகை மொழி கையேட்டை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வெளியிட்டார். அருகில் கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல்லில் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விழா, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமர் எம்.பி. நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கசர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை தினம் 2024ஐ முன்னிட்டு சைகை மொழிக்கான கையேடுகளை வெளியிட்டு பேசினார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு காது கேளாதவர்களுக்கான சைகை மொழியினை எடுத்துரைக்கும் வகையில் சைகை மொழி பயிற்சியாளர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. சர்வதேச காõது கோளாதோர் தின விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரங்கத்தில் நடந்த, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, பரிசு வழங்கும் விழா நிகழ்வுகள் முழுவதும் சைகை மொழி பயிற்சியாளர் மூலம், சைகை மொழியால் மாற்றுத் திறனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நாமக்கல் மாநக துணை மேயர் பூபதி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கோகிலா, தடகள பயிற்சியாளர் ஜி.கோகிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story