வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சார கட்டணத்தை குறைக்கலாம் : ஆட்சியர்

வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சார கட்டணத்தை குறைக்கலாம் : ஆட்சியர்
X

பட விளக்கம் : நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் உமா

வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சார கட்டணத்தை குறைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசினார்.

வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சார கட்டணத்தை குறைக்கலாம் : ஆட்சியர்

நாமக்கல், மார்ச். 2-

சோலார் மின்சார பேனல்களை பொருத்தி வீடுகளுக்கு மின்சார கட்டணத்தை குறைக்கலாம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறøதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர்உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் பேசியதாவது:

ஆமணக்கு எண்ணெய்ல இவ்ளோ மகத்துவம் இருக்கா?

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 724.06 மி.மீ. ஆகும். பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட 4.22 மி.மீ. குறைவாக மழை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் வரை நெல் 5,417 எக்டர், சிறுதானியங்கள் 80,843 எக்டர், பயறு வகைகள் 8,285 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 31,404 எக்டர், பருத்தி 2,715 எக்டர் மற்றும் கரும்பு 10,155 எக்டர் என மொத்தம் 1,38,819 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 609 எக்டர், கத்திரி 439 எக்டர், வெண்டை 329 எக்டர், மிளகாய் 314 எக்டர், மரவள்ளி 12,999 எக்டர், வெங்காயம் 4,415 எக்டர், மஞ்சள் 1806 எக்டர் மற்றும் வாழை 2,590 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி பசுமையான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தை குறைத்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற மின்கட்டண ரசீது மட்டுமே கொண்டு மொபைல் ஆப்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அனுகலாம் என கூறினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் படித்த செய்தி : விறுவிறுப்பு, பரபரப்பு... சீட் நுனியில் திக் திக்... சூப்பர் படம்யா இது!

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings