ஆலாம்பாளையம் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஆலாம்பாளையம் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒரு சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் முதல் நாளில் நாமக்கல் மாவட்டத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இரண்டாம் நாளில் பள்ளிபாளையம் அருகில் உள்ள ஆலாம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் (43) என்பவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனு தாக்கல் இல்லை. நாளை 31ம் தேதி திங்கள்கிழமை அமாவாசை நாள் என்பதால் அதிகப்படியான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

வரும் பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்