தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் பயோமெடிக்கல் பேரவை துவக்கம்

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், பயோ மெடிக்கல் துறை மாணவர் பேரவை துவக்க விழா ;நடைபெற்றது.
தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் பயோமெடிக்கல் பேரவை துவக்கம்
நாமக்கல்,
தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் & திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில், கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் சேர்மன் டாக்டர் பிஎஸ்கே. பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அசோகன், மாணவர் பேரவையை துவக்கி வைத்து, பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் சிறப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பற்றி விரிவாக பேசினார். நாமக்கல் எம்.எம். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம். சிவக்குமார் (எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மருத்துவமனைகளில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கை நடத்தினார். முன்னதாக துறையின் தலைவர் அசோக், மாணவர் பேரவையின் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். நான்காம் ஆண்டு மாணவர் பிரேமநாத் வரவேற்றார். முடிவில் பவதாரணி நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu