நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் திருவிழா கோலாகலம்!
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் திருவிழா கோலாகலம்
நாமக்கல்,
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில், மாணவ மாணவிகளால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சூரியனுக்கு நன்றி செலுத்துவதோடு, மாடுகளுக்கும் நன்றி செலுத்தி உழவர்களால் கொண்டாடக் கூடிய பொங்கல் விழாவை, மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நாமக்கல் சின்ன வேப்பனத்தில் உள்ள நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் பொங்கல் திருழவிழா நடைபெற்றது. பள்ளி சேர்மன் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர். கரும்பு, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு தோரணங்கள் கட்டி, பொங்கல் படையல் வைத்து அனைவரும் சூரியனை வணங்கி விழாவை துவக்கினார்கள். தொடர்ந்து பொங்கல் விழாவின் சிறப்பு குறித்து மாணவ மணவியர் பேசினர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu