நாமக்கல் மாவட்டத்தில் 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: அமைச்சர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: அமைச்சர் தகவல்
X

பட விளக்கம் : நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரனங்களை வழங்கினார்கள். அருகில் கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல் மாவட்டத்தில் 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: அமைச்சர் தகவல்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு, 202 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 54.16 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அங்கீகாரித்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை உருவாக்கினார். உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு உரிய மேன்மையும், உரிமைகளும் வழங்க வேண்டும் என்ற நோக்கில், டிச.3, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை, 22,331 பேருக்கு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் மட்டும், 3,068 பேருக்கு, தேசிய அடையாள அட்டையும், 5,474 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, செல்போன், மோட்டார் பொருத்திய தையல் மெசின்கள் உள்ளிட்ட அனைத்து வகை உதவி உபகரணங்கள், 501 பேருக்கு ரூ. 28.76 கோடி மதிப்பிலும், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலியிலிருந்து, 79 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ரூ. 57.36 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 72 பேருக்கு ரூ. 54.16 லட்சம் மதிப்பில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!