கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் முன்பு ரூ.3 கோடியில் ராஜகோபுர பணிகள் துவக்கம்

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் முன் ராஜகோபுரம் கட்டுவதற்காக, சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி குழுவினர் மண் பரிசோதனை மேற்கொண்டனர்.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் முன்பு
ரூ.3 கோடியில் ராஜகோபுரம் : பணிகள் துவக்கம்
நாமக்கல்,
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் முன்புறம் ரூ. 3 கேடி மதிப்பில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பழமைவாய்ந்து அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். வல்வில் ஓரி மன்னரால் கட்டப்பட்ட கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இந்த கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்கோõயிலின் முன்புறும் ரூ.3 கோடி மதிப்பில் 3 நிலைகொண்டு ராஜகோபுரம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் முதற்கட்ட பணியாக, சேலம் கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி குழுவினர் மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியதாவது:
அறப்பளீஸ்வரர் கோயில் முன்புறம் 3 நிலை கொண்ட ராஜகோபுரம், உபதாரர்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. ராஜகோபுரத்தின் அடித்தளம் அமைப்பது தொடர்பாக மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மண் பரிசோதனை முடிவுக்குப் பின் ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இதுபோல் ரூ.1.67 கோடி மதிப்பில் அன்னதானக் கூடம், நந்தவனம் மற்றும் முடித்திருத்தும் கூடம், சுகாதார வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோயில் நந்தவனத்தில் அந்தந்த .நட்சத்திரத்திற்கு ஏற்ற மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும், ஐகோர்ட் உத்திரவுப்படி பக்தர்களின் வசதிக்காக கோயில் முன்புறம் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக கோயில் முன் உள்ள பள்ளத்தில் பாறை மற்றும் மண் நிரப்பி சமன்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்தப் பாறைகள் ஒவ்வொன்றும் 1 டன்னுக்கு அதிகமான எடை கொண்டவை. 150 மீட்டர் அகலம், 300 மீட்டர் நீளத்தில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணி முழுக்க உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஒரு வார காலத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும். அதன்பின் வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டு வரும் என்று கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu