நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரிக்கு ஐசிஏஆர் அங்கீகாரம்

நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரிக்கு ஐசிஏஆர் அங்கீகாரம்
X

நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியில், அதன் துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அருகில் தாளாளர் கணபதி, முதல்வர் கோபால் ஆகியோர்.

நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரிக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் (ஐசிஏஆர்) அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரிக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் (ஐசிஏஆர்) அங்கீகாரம் கிடைத்துள்ளது

நாமக்கல் நகரில் சேந்தமங்கலம் ரோட்டில் பிஜிபி வேளாண்மை அறிவியில் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு தற்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதையொட்டி கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பிஜிபி குழுமத்தின் துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசா£மி கூறியதாவது: பிஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி பெரியசாமியின் நேரடி மேற்பார்வையில், நாமக்கல்லில் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிது. தமிழ் நாட்டில் உள்ள 28 தனியார் வேளாண்மை கல்லூரிகளில், 5 கல்லூரிகளுக்கு மட்டுமே ஐசிஏஆர் தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் நமது பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியும் ஒன்றாகும்.

பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை கல்லூரியில் இருந்து 7 பேட்ச் மாணவர்கள் பிஎஸ்சி (அக்ரிகல்சர்) மற்றும் வேளாண்மை டிப்ளமோ படிப்பு முடித்து சென்றுள்ளனர். வேளாண்மை இளநிலை மற்றும் வேளாண்மை பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள், ஆராய்ச்சி கூடங்கள், வேளாண்மை பயிற்சி மேற்கொள்ள போதிய அளவிலான விளை நிலங்கள், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தினை வளர்ப்பதற்கு விளையாட்டு மைதானம், மாணவ மாணவிகளுக்கு தனித் தனியான விடுதி வசதிகளும் இந்த அங்கீகாரம் பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகாரம் பெறுவதன் மூலம் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்து விட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் சென்று தங்களுடைய முதுநிலை படிப்பினை மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பினை பெறவும் துணையாக இருக்கும். மேலும் அவர்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையங்களிலும் பணி புரிய முடியும். இந்த அங்கீகாரமானது இங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த துறைகளிலும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறு இணைந்து பணி புரிவதால் வேளாண்மையில் உள்ள விவசாயிகளின் பயிர் சார்ந்த கேள்விகளுக்கு உரிய விடை காண முடியும். மற்றும் வேளாண்மையில் மகசூலை பெருக்குவதற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பிஜிபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி உடனிருந்தார்.

Tags

Next Story