ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றத்தை ரத்து செய்யக்ககோரி மனித சங்கிலி போராட்டம்

ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றத்தை ரத்து செய்யக்ககோரி மனித சங்கிலி போராட்டம்
X

ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் பகுதி மக்களின் வாழ்வாதாரமான தற்போதைய புதிய பஸ் நிலையம் இடமாற்ற தீர்மானத்தை நகராட்சி ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, மக்கள் நலக்குழு சார்பில் மனித சங்கிலி அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், வணிகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, ராசிபுரம் பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி அறவழிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். சுதந்திர போராட்ட வாரிசுகள் சங்க தலைவர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.

போராட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு மனித சங்கிலி அமைத்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, புதிய பஸ் நிலைய இடமாற்றத்திற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். ராசிபுரம் மக்கள் நலக்குழு தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் முருகன், கவுரவ தலைவர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சபீர் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!