நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்!

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு   உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்!

பைல் படம் : நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

நாமக்கல்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல் பயிற்சி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) அம்ருநிஷா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் பாஸ்கரன், பயிற்சியை பார்வையிட்டு கருத்துரை வழங்கினார்.

மருத்துவ படிப்புகள், இன்ஜினியரிங் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வேளாண், ஆடிட்டர் படிப்பு போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், 7.5 இடம் ஒதுக்கீடு விபரங்கள், விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் உதவித்தொகை சார்ந்த விபரங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் சந்தோஷம், முத்துகிருஷ்ணன், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைபள்ளி முதுகலை ஆசிரியர் சுகன்யா ஆகியோர், கருத்தாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். தொடர்ந்து, பயிற்சி இண்டர்நெட் மூலம், பயிற்சி குறித்து தேர்வு நடத்தப்பட்டது. பயிற்சி முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி செய்திருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story