குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாமக்கல்லில் தீவிர போலீஸ் பாதுகாப்பு
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும், போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் வருகிற 26ம் தேதி, குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு போலீஸ் டிஜிபி உத்தரவின்படியும், கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. வழிகாட்டுதல் படியும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும், குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பஸ் நிலையம், கடைவீதி, முக்கிய சந்திப்புகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குற்ற தடுப்பு போலீசார் மற்றும் வெடிபொருள் கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் (BDDS BOMB Detection & Disposal Squad), சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu