பெரமாண்டம்பாளையம் ஸ்ரீ கவுண்டச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பெரமாண்டம்பாளையம் ஸ்ரீ கவுண்டச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தி அருகே உள்ள பெரமாண்டம்பாளையத்தில், பழமையான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கவுண்டச்சியம்மன், ஸ்ரீமருதையண்ணன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சப்தகன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா மகா கணபதி, மகாலட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் மணப்பள்ளி காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக மணப்பள்ளி, எஸ்.வாழவந்தி வழியாக கோயிலை வந்தடைந்தனர்,
மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது
நேற்று வியாழக்கிழமை காலை 5:30 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, புண்யாகம் செய்து அனைத்து சாமிகளுக்கும் காப்பு கட்டபட்டப்பட்டு இரண்டாம் கால வேள்வி துவங்கியது, 7.30 மணிக்கு மகாபூர்ணாஹூதி, யாத்ராதானம் செய்து, அதிர்வேட்டுகள் முழங்க கலசங்கள் புறப்பட்டது.
தொடர்ந்து 8:30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து மூலவர்களாக விளங்கும். ஸ்ரீ விநாயகர். ஸ்ரீ. பாலமுருகன், ஸ்ரீ கவுண்டச்சியம்மன், ஸ்ரீ மருதையண்ணசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,
அதனை தொடர்ந்து தசதானம், தசதரிசனம், மகா தீபாராதணை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், நாமக்கல் மாவட்டம், கரூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பூவானி குல பங்காளிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu