நாமக்கல்லில் பிப். 1 முதல் 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறும்: கலெக்டர்
பட விளக்கம் : நாமக்கல்லில் புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த, ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல்லில் பிப். 1 முதல் 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறும்: கலெக்டர்
நாமக்கல்,
நாமக்கல்லில் பிப். 1 முதல் 10ம் தேதி வரை, தமிழக அரசின் சார்பில் புத்தகத்திருவிழா நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல்லில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 3ம் ஆண்டு புத்தக திருவிழா, நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற பிப். 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்புத்தக திருவிழாவில் பல்வேறு அரங்குகள், முக்கிய பிரமுகர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும், மருத்துவ முகாம், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறவுள்ளன. இப்புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்திட வேண்டும்.
புத்தகத்திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது. எனவே, இந்த அறிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி, குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, ஆர்டிஓக்கள் பார்தீபன், சுகந்தி உள்ளிட்ட பல் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu