பரமத்திவேலூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

பரமத்திவேலூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
X

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பரமத்தி வேலூரில் டீக்கடைகள், பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

பரமத்தி வேலூரில் டீக்கடைகள், பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தமிழகம் முழுவதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, என்பது குறித்து அதிகரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, வேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் நகரப் பகுதியில் உள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில் திடீர் சோதன மேற்கொண்டனர்.

அப்போது நான்கு ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடை உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால், கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பைன செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story