கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை  ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
X
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று 1,008 லிட்டர் பாலபிசேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல்,

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். இன்று கக்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 9 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள், சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, வழக்கத்தை விட இன்று ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!