காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி
X

பட விளக்கம் : நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது.

காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

நாமக்கல்,

நாமக்கல்லில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் காலை நேரத்தில் டிபன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக குறிப்பிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த சமையலறைகள் அமைக்கப்பட்டு, அங்கு உணவு சமைக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கு வாகங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த திட்டத்தில் பணியாற்றும் மைய பொறுப்பாளர்கள் மற்றும் சமையர்களுக்கான தீ தடுப்பு பயிற்சி, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, நாமக்கல் மாவட்ட உதவி அலுவலர் வெங்கடாசலம் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். சமையலறையில் கேஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், தீ விபத்து ஏற்படும் நேரத்தில் பாதுகாப்பாக செயல்படுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து விளக்கம் அளித்தார். பயிற்சியில் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story