ப.வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பையில் தீ விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ப.வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பையில்   தீ விபத்து: போக்குவரத்து பாதிப்பு
X

ப.வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பை மேட்டில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர்  தீயை அணைக்கும் காட்சி 

பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல், பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், காவிரி பாலத்தின் அருகில் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. வேலூர் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை, தூய்மைப் பணியாளர்கள் சிலர் இந்த பகுதிகளில் கொட்டி வருகின்றனர். மேலும் வேலூர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள், ரோட்டோர இறைச்சிக்கடைகள், சிக்கன், மட்டன் கடைகள் உள்ளிட்டவைகளில் இருந்து குப்பைகள் மற்றும் கழிவுகளை மூட்டையாக கட்டிவந்து, தேசிய நெடுங்சாலை ஓரம் கொட்டுவதால், குப்பை மலைபோல் தேங்கி உள்ளது. மேலும் குப்பையில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது.

இந்தநிலையில் இன்று அதிகாலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டு, நெடுஞ்சாலைகளில் வானகங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக ப.வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீ மற்றும் புகையை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தனர்.

இது குறித்து ப.வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, நாங்கள் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆட்களை நியமித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இருப்பினும் அடையாளம் தெரியாத நபர்கள் குப்பைக்கு தீ வைத்துச் சென்றதால் இந்த தீ விபத்து நடைபெற்றிருக்கலாம் என கூறினர்.

Tags

Next Story
why is ai important to the future