நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு

நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
X
நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு

நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிப்பதற்காக, திரளான விவசாயிகள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு

நாமக்கல்,

தமிழக அரசின் நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் திரளான விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்புக்குழுவினர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு நில எடுப்பு சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. பின்னர் அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அந்த சட்டத்தின்படி 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களை சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் பெற விரும்பும், புதியதாக தொழில் திட்டம் தொடங்குவோர் விண்ணப்பித்து பெறலாம். இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சட்டத்தை தமிழக அரசு கடந்த ஒரு ஆண்டாக நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென, நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்ட விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் எவ்வித தடையும் இன்றி, விவசாயிகளின் நிலங்களை எடுத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நிபந்தனை ஏதும் இன்றி இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story