மின்சார வாரிய அவசர உதவிக்கான 24 மணி நேர தொடர்பு செல்போன் எண் வெளியீடு
மின்சார வாரிய அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தின், செல்போன் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொதுமக்கள் மழைக் காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது, இது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.
இடி மின்னல் உள்ளபோது வெளியே செல்லக்கூடாது. அந்த நேரத்தில் குடிசை பகுதியிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் ஸ்டாப்பிலோ தஞ்சம் அடைய வேண்டாம். மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள். உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத, தாழ்வான பகுதிகளில் தஞ்சம் அடைய வேண்டும். மேலும் இடி மின்னலின்போது மின்சார உபகரணங்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.
வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகளை இயக்கவோ அணைக்கவோ கூடாது. ஸ்டே கம்பி மற்றும் மின் கம்பங்களில் கொடி, கயிறு கட்ட வேண்டாம். ஸ்டே கம்பி மற்றும் மின் கம்பத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கட்டக் கூடாது. பொதுமக்கள் மின்சார விநியோகம் சார்ந்த குறைபாடுகளை தெரிவிக்கவும், சரி செய்யவும் 24 மணிநேரமும் செயல்படும் தொலைபேசி சேவைக்கு 9498794987 என்ற செல்போன் நம்பரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu