நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ.5.40
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். வியாபாரிகளும் இந்த விலையை கடைபிடித்து வருகின்றனர். கடந்த, 24ம் தேதி, ரூ. 5.15 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்ந்து ரூ. 5.25 ஆனது. 28ம் தேதி 5 பைசா உயர்ந்து ரூ. 5.30 ஆனது. 29ம் தேதி மீண்டும் 5 பைசா உயர்ந்து ரூ. 5.35 ஆனது. இந்த நிலையில் நேற்று மாலை என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 585, பர்வாலா 521 , பெங்களூர் 580, டெல்லி 545, ஹொஸ்பேட் 530, ஹைதராபாத் 530, கொல்கத்தா 600, மைசூர் 582, விஜயவாடா 555.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 111 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 107 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu