நாமக்கல்: அதிகாலையில் வாக்கிங் சென்ற அரசு டாக்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல்: அதிகாலையில் வாக்கிங் சென்ற அரசு டாக்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
X

டாக்டர் பாஸ்கர்.

நாமக்கல் நகரில், இன்று அதிகாலையில் வாக்கிங் சென்ற அரசு டாக்டர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல்லை, திருச்செங்கோடு ரோட்டில் வசித்து வந்தவர், டாக்டர் பாஸ்கரன் (55). இவர், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் டாக்டராக பணிபுரிந்து வந்தார். மேலும், ஆஸ்பத்திரியின் துணை ஆர்எம்ஓ ஆகவும் பணியாற்றினார். இவர், தினசரி அதிகாலை நேரத்தில் நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில், நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

வழக்கம் போல், அதிகாலை 5.45 மணியளவில், டாக்டர் பாஸ்கர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு தனது டூ வீலரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!