/* */

நாமக்கல் நகராட்சி: காங்கிரசுக்கு ஒதுக்கிய வார்டில், சுயேட்சை வேட்பாளருக்கு திமுக சின்னம்

நாமக்கல் நகராட்சியில் காங்கிரசுக்கு ஒதுக்கிய வார்டில், திமுக வேட்பாளருக்கும் கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டதால் வேட்பாளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி: காங்கிரசுக்கு ஒதுக்கிய வார்டில், சுயேட்சை வேட்பாளருக்கு திமுக சின்னம்
X

பைல் படம்.

நாமக்கல் நகராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக 36 வார்டு, காங்கிரஸ் ஒன்று, கொ.ம.தே.க 2 என மொத்தம் 39 வார்டுகளில் போட்டியிட கூட்டணி கட்சியினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், 16வது வார்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 4ம் தேதி திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் நவீத்தும் கலந்து கொண்டு, பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே வார்டில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சரவணன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று வேட்பு மனு வாபஸ் இறுதி நாளன்று வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த, முன்னாள் தி.மு.க கவுன்சிலர் சரவணனுக்கு, உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் திமுக போட்டி வேட்பாளருக்கும், திமுக சின்னம் ஒதுக்கிட கட்சித் தலைமை கடிதம் கொடுத்ததால், திமுக கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கொடுத்த ஒரே வார்டையும் திமுக பறித்துக்கொண்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, காங்., வேட்பாளர் ஷேக்நவீத் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சி, 16வது வார்டில் மொத்தம் 11 வேட்பாளர்களின் வேட்பு மனு விபரங்கள், மாநில தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபோது, சரவணன் என்பவரை, சுயேச்சை என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர் வாபஸ் பெறும் நாளன்று சரவணன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரவணனுக்கு உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தால் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயல். அதனால், அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது. அவரது வேட்பு மனுவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

Updated On: 7 Feb 2022 6:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  10. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு