பாஜக சார்பில் தியாகி ஒண்டிவீரன் பகடை குரு பூஜை விழா

பாஜக சார்பில் தியாகி ஒண்டிவீரன் பகடை குரு பூஜை விழா
X

நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெற்ற தியாகி ஒண்டி வீரன் பகடை குருபூஜை விழாவில், மாநில பாஜ துணைத்தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு, அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பகடை குருபூஜை நடைபெற்றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒத்தை ஆளாக சென்று ஆங்கிலேயப் படையை அடித்து விட்டிய வீரர் ஒண்டிவீரன் பகடை. இவரது 252-ம் ஆண்டு நினைவு நாள் குருபூஜை விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் ராம்குமார், தமிழரசு, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பாஜ துணைத்தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, எஸ்டி அணி மாநில தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தியாகி ஒண்டிவீரன் பகடையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், நாமக்கல் நகர தலைவர் சரவணன், பாஜக நிர்வாகிகள் சுரேஷ்கண்ணன், அகிலன், முத்துக்குமார், ரவி, சேதுராமன், ஹேமா, செந்தில்நாதன், ரவி, வக்கீல் குப்புசாமி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story