நாமக்கல் பாராளுமன்ற தொகுதி 4வது சுற்றில் திமுக வேட்பாளர் 3,161 ஓட்டுகள் முன்னிலை

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன்.
நாமக்கல் பார்லி. தொகுதி 3வது சுற்று முடிவில் திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 3,161 ஓட்டுகள் முன்னிலை பெற்றுள்ளார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாமக்கல் பாராளுமன் தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் மையம், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி துவங்கியது. மாவட்ட கலெக்டர் உமா, தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் ஹர்குன்ஜித்கவுர், ஓனில் கிளமெண்ட் ஓரியா ஆகியோர் முன்னிலையில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.
தொடர்ந்து எலக்ட்ர்ரானிக் வாக்குப்பதிவு மெசின்களில் இருந்த ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. நாமக்கல் பார்லி. தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் முதல் சுற்று எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தன்னை அடுத்து வந்த திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை விட 1,089 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். 2ஆவது சுற்றில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை விட 2,095 ஓட்டுகள் அதிகம் பெற்றார். 3வது சுற்றில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 2,189 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
4வது சுற்று முடிவு:
4வது சுற்று முடிவில் 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் பெற்று ஓட்டுகள்: 93,821, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி பெற்ற ஓட்டுகள் : 90,660. அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 23,161 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார். 3வது இடம் பெற்ற பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம் 18,511, 4வது இடம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணிமொழி 18,229 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu