துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் ரேக்ளா போட்டி: மோகனூர் குதிரைக்கு முதல்பரிசு
பட விளக்கம் :துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மோகனூரில் குதிரை வண்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது
துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் ரேக்ளா போட்டி: மோகனூர் குதிரைக்கு முதல்பரிசு
நாமக்கல்,
தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ரேக்ளா போட்டியில், மோகனூர் குதிரை முதல் பரிசு வென்றது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றிய தி.மு.க., ஒன்றிய இளைஞரணி சார்பில், குதிரை ரேக்களா போட்டி, என்.புதுப்பட்டியில் நடைபெற்றது. போட்டியில், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 44 குதிரைகள் கலந்து கொண்டன. புதிய, சிறிய மற்றும் பெரிய குதிரை என 3 பிரிவுகளில், 4 சுற்றுகளாக முறை போட்டி நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ரோடு ஓரம் நின்று, உற்சாகமாக ரேக்ளா போட்டியை கண்டு ரசித்தனர்.
சிறிய குதிரை பிரிவு ரேக்ளா போட்டியில், கரூர் எஸ்.கே. பிரதர்ஸ், குளித்தலை எம்.ஆர். நிமிலன், சேலம் கொம்பன் பாய்ஸ் ஆகியவை, முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. புதிய குதிரை பிரிவில் பவானி ஆனந்த், தொட்டச்சேரி யமஹா மணி, மோகனூர் பிரகாஷ் ஆகிய குதிரைகள், முதல் மூன்று இடங்களை பிடித்தன. மேலும், குடந்தை தமிழினி, சின்னண்ணன் பவானி, சேந்தை இ.கே.,முரளி ஆகியவை, முதல் 3 இடங்களை பிடித்தது. பெரிய குதிரைக்கான போட்டியில், மோகனூர் பிரகாஷ் முதல் பரிசும், திருச்சி உறையூர் நம்பி உதயசூரியன் 2 மற்றும் 3ம் பரிசும் பெற்றன.
தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவலடி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேலுபாலாஜி வரவேற்றார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. விழாவில் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற குதிரை வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். முன்னதாக, தமிழக துணை முதல்வர் உதயநிதியின் 47 வது பிறந்த நாளையொட்டி, 47 அடி உயர கம்பத்தில் திமுக கட்சிக் கொடியை, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. ஏற்றி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu