நாமக்கல்லில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 70 பாஜக.,வினர் கைது

நாமக்கல்லில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 70 பாஜக.,வினர் கைது
X

தமிழ அரசைக் கண்டித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க. அரசைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு 70 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க. அரசைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு 70 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 55 பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல இடங்களில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இச்சம்பவத்திற்கு, அ.தி.மு.க., பாஜக, பாமக உள்ள பல்வேறு அரசியில் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக அரசைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கள்ளச்சாராயம் குடித்து இறந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்யவேண்டும், போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 12 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்