நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 138 மையங்களில் 29,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம் : சிங்கிலிப்பட்டி, வகுரம்பட்டி தொடக்கப்பள்ளிகள், கீரம்பூர் அங்கன்வாடி மையம், நல்லிபாளையம் கலைமகள் பள்ளி, நாமக்கல் அஹிம்சா டெக்ஸ்டைல்ஸ், திருச்சி ரோடு அழகு நகர் சமுதாயக் கூடம், தேர்நிலை அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி, நாமக்கல் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: விட்டம்பாளையம் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கிறிஸ்டி ஆலை, புதுப்புலியம்பட்டி மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம், தேவனாங்குறிச்சி தொடக்கப்பள்ளிகள், சாந்தி மில், திருச்செங்கோடு பஸ் நிலையம், மலையடிவாரம் சுகாதார மையம், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி, தொண்டிக்கரடு வி.எஸ்.காலனி, மான்குட்டைபாளையம் சுகாதார மையம், 9வது வார்டு விநாயகர் கோயில் சூரியம்பாளையம் சுகாதார மையம், வெள்ளாளப்பட்டி ஜீவா நகர், தேவானங்குறிச்சி என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: அக்ரஹாரம், கண்டிப்புதூர்,ஆவாரங்காடு தொடக்கப்பள்ளிகள், ஆண்டிக்காடு துணை சுகாதார நிலையம், பள்ளிபாளையம் பாவாயம்மாள் திருமண மண்டபம், அரசு ஆஸ்பத்திரி, சி.என்பாளையம் சுகாதார மைய்ம், குமாரபாளையம் ஜே.கே.கே பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஏவிஎஸ் பள்ளி, நாராயண நகர், குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜேகேகே நடராஜா மண்டபம், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி, ஆலங்காட்டுவலசு தொடக்கப்பள்ளி, விஎஸ்பி மில், விஎஸ்எம் மில், ரோட்டரி ஹால், பள்ளிபாளையம்என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: கூனவேலம்பட்டி தொடக்கப்பள்ளி, செங்குந்தர் கலையரங்கம், மலையாம்பட்டி தொடக்கப்பள்ளி, முத்தாயம்மாள் மெமோரியம் கல்லூரி, பட்டணம் தொடக்கப்பள்ளி, பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம், பட்டணம் ரோடு பழைய பஸ் நிலைய பிள்ளையார் கோயில், துளசி டிபார்ட்மென்டல் ஸ்டோர், வாசவி மஹால், முருங்கப்பட்ட இ-சேவை மையம், புதிய பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் இராசிபுரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: என்புதுக்கோட்டை, ஜம்புமலை தொடக்கப்பள்ளிகள், எ.பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வரகூர் வித்யாமந்தி பள்ளி, எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: பெரியகரசப்பாளையம், லத்துவாடி, செவந்திப்பாளையம், சுப்ரமணியபுரம் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மோகனூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: செல்வம் கலை அறிவியல் கல்லூரி, நொச்சிப்பட்டி அங்கன்வாடி மையம், புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமலைப்பட்டி மாரியம்மன் கோயில் மற்றும் புதுச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், ஜேக்கரிஅம்மன் நூற்பு ஆலை, கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம், ஜமீன் இளம்பிள்ளை துணை சுகாதார நிலையம், உப்புபாளையம், கள்ளிபாளையம் அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஜேடர்பாளையம் எ ன்ஆர்இஜிஎஸ் மையம், வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையம், வெங்கரை கிழக்குத்தெரு மையம், கொளக்காட்டுப்புதூர், பாண்டமங்கலம் துணை சுகாதார நிலையங்கள், மேற்கு வண்ணாந்துரை அங்கன்வாடிமையம், பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், கரட்டூர் அங்கன்வாடி மையம், ஆனங்கூர் மேல்நிலைப்பள்ளி, சானார்பாளையம் அங்கன்வாடி மையம், கொந்தளம் தொடக்கப்பள்ளி

பரமத்தி வட்டாரம்: நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், வசந்தபுரம் ஸ்ரீராம் பள்ளி, பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையம், குப்புச்சிபாளையம் தொடக்கப்பள்ளி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், உத்திகாபாளையம் தொடக்கப்பள்ளி, வேலூர்அரசு ஆஸ்பத்திரி, மரவாபாளையம் தொடக்கப்பள்ளி, பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிபாளையம் வட்டாரம்: மோளியப்பள்ளி, பழைய கரியாம்பாளையம், வேலகவுண்டம்பட்டி தொடக்கப்பள்ளிகள், பெரியமணலி ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் மையம் மற்றும் எலச்சிப்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: மலைவேப்பங்குட்டை, தாண்டாகவுண்டனூர், புதுவலவு, காளப்பநாய்க்கன்பட்டி, ஜங்களாபுரம், பேளுக்குறிச்சி கிழக்குத்தெரு, பச்சுடையாம்பட்டி தொடக்கப்பள்ளிகள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சேந்தமங்கலம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளக்கல்பட்டி தொடக்கப்பள்ளி, ஈஸ்வரமூர்த்திபாளையம் லயோலா காலேஜ் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி, மோட்டூர், செம்பாளிப்புதூர், முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், சீராப்பள்ளி காந்தி காலனி, அம்பேத்கார் நகர், விஎம் பாளையம் சிறப்பு மையங்கள் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், வையப்பமலை ஆரம்ப சுகாதார நிலையங்கள், நந்தவனம் தொடக்கப்பள்ளி, மயில்புறக்காடு அங்கன்வாடி மையம், பருத்திப்பள்ளி, மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையங்கள்.

வெண்ணந்தூர் வட்டாரம்: வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி, ஆனந்தகவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி, அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையம், அத்தனூர் சமத்துவபுரம், கட்டனாச்சம்பட்டி அண்ணா காலனி அங்கன்வாடி மையம், வெண்ணந்தூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: சோளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம், பவர்காடு, வாழ்குளிப்பட்டி சிறப்பு மையங்கள், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி, கொல்லிமலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 138 மையங்களில், இன்று 29,630 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு