Begin typing your search above and press return to search.
மயானத்திற்கு ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்
போதுப்பட்டி மயானத்திற்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS

போதுப்பட்டி மயானத்திற்கு, ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். அருகில் நகராட்சித்தலைவர் கலாநிதி.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, 21 வது வார்டு போதுப்பட்டியில் உள்ள மயானத்திற்கு ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர செயலாளர்கள் சிவகுமார், ராணா ஆனந்த் நகராட்சி கவுன்சிலர்கள் நந்தகுமர், பாலசுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக பிரமுகர்கள் அசோகன், செல்வம், பழனிசாமி, மதன், வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.