சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள் மீது வழக்கு
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறைஅளிக்காத, 63 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறைஅளிக்காத, 63 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொழிலாளர் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தொழிலாளர்களுக்குக் கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா, அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவம் சமர்ப்பித்து முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா, என்பது குறித்தும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டனர்.

மொத்தம் 71 கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 63 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாமலும், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. இதையொட்டி சம்மந்தப்பட்ட 63 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நாமக்கல் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing tools