சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர் விருது பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர் விருது பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம் : சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர் விருது பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கான விருது பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கான விருது பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா, நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஆண்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கும் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 71-ஆவது கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்குவதற்கான தேர்வு, முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. எனவே, நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் தங்களது விபரங்களை ஆர்சிஎஸ்.டிஎன்.ஜிஓவி.இன்/ஆர்சிஎஸ்வெப்26 என்ற கூட்டுறவுத் துறையின் டேட்டா போர்ட்டலில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த சங்கங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மாநில அளவில் பதிவாளராலும், மாவட்ட அளவில் மண்டல இணைப்பதிவாளரும் தேர்வு செய்வார்கள். தகுதி உடைய அனைத்து சங்கங்களும், ரேஷன் கடை பணியாளர்களும் உடன் தங்கள் விபரங்களை போர்ட்டலில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story