மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டங்களுக்கு அகில பாரத வக்கீல்கள் சங்கம் ஆதரவு

மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டங்களுக்கு அகில பாரத வக்கீல்கள் சங்கம் ஆதரவு
X

நாமக்கல்லில் நடைபெற்ற அகில பாரத வக்கீல்கள் சங்க கூட்டம் 

ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவு 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து து நாமக்கல்லில் நடைபெற்ற அகிலபாரத வக்கீல்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிதது நாமக்கல்லில் நடைபெற்ற அகிலபாரத வக்கீல்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் பாஸ்கர் நிகழ்ச்சிக்கு தலைமை வகிததார். நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். நாமக்கல் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சங்க பொதுச் செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். தென்மண்டல பொதுச்செயலாளர் கேசவன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்கள். தொடர்ந்து வக்கீல்கள் பழனிக்குமார், பாபு, பாஸ்கர், ரமேஷ்குமார் ஆகியோர் தலைமையில், வக்கீல்கள் ஜெயபால், கார்த்திகேயன், சங்கமித்ரா, நிர்மலா, சுதிர்குமார், மணிகண்டன், சந்திரசேகர், சங்கர், கேசவன், வாசு, சிவப்பிரகாஷ், பத்மா, பாஸ்கர், பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசு வருகிற ஜூலை 1 தேதி முதல், இந்தியாவில் புதியதாக 3 கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தப்படுகிறது. புதிய கிரிமினல் சட்டங்களான பாரதிய நியாய சங்கிதா, பாரதிய சாக்ஷியா அபிநயம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கிதா ஆகிய 3 சட்டங்களுக்கு ஆதவு தெரிவித்தும், மற்றும் பல தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த திரளான வக்கீல்கள் கூட்டத்தில் கலந்துகொகண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil