உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொல்லிமலையில் விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொல்லிமலையில் விழிப்புணர்வு பேரணி
X

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கொல்லிமலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கொல்லிமலையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கொல்லிமலையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள, நரியன்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. டிஎன்எஸ்எப் மாவட்ட துணைத்தலைவர் ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சூழலியல் உப குழு ஒருங்கிணைப்பாளர் குணசேகர் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, 2024-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக டிஎன்எஸ்எப் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, உலக சுற்றுச்சூழல் தின பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சரசு, சித்தூர் நாடு ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் செல்லமுத்து மற்றும் லோகேஸ்வரன், கோபி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். வானவில் மன்ற நிர்வாகிகள், மாணவ மா£ணவிகள் மற்றும் திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!