கலெக்டர் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு

கலெக்டர் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். அதே பகுதியில், டீ கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுகந்தினி (40). அவர், பிளஸ் 1 படிக்கும் தனது மகனுடன், நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்தார். தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் ஆட்சியர் உமா, கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த சுகந்தினி, தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் சுகந்தினியிடம் இருந்து தீப்பெட்டியை பறித்துக் கொண்டனர். இதைக்கண்டு, அங்கு வந்த ஆட்சியர் உமா, சுகந்தினியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சுகந்தினி கூறும்போது, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், அரசுக்கு சொந்தமான ரோட்டில், கழிவுநீர் டேங்க், வேகத்தடை அமைத்து தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக, புகார் செய்தும் என்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் புகார் செய்ததால், சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், வேறு வழியின்றி, தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறினார்.

அதையடுத்து, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசாருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களை நன்கு சோதனை செய்தபின் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆட்சியர் முன்னிலையில் பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story