ப.வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம்
பட விளக்கம் : பரமத்திவேலூரில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கில், டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி முரளி பேசினார்.
ப.வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம்
நாமக்கல்,
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் வேலூர் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது.
வேர்டு நிறுவன செயலாளர் சிவகாமவல்லி வரவேற்ற்றார். பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி முரளி தலைமை வகித்து, பெண்கள் சவால்களை சந்திப்பது எப்படி என்பது குறித்து பேசினார். இதனை அடுத்து முன்னிலை வகித்து பேசிய கந்தசாமி கண்டார் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியை விஜயா பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி என்பது குறித்து பேசினார். வேலூர் போலீஸ் நிலைய எஸ்.ஐ. சீனிவாசன், எஸ்எஸ்ஐ நாகமணி ஆகியோர் பாலியல் சார்ந்த வன்முறைக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவு செய்தல் குறித்து பேசினார்கள். வக்கீல் மகேஸ்வரி மற்றும் சரண்யா ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சுப்பிரமணிகலைக் குழு மூலம் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வக்கீல் பவனேஷ் கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியில் 100 -க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் கலந்துகொண்டனர்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu