கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
X

பைல் படம் : நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல்,

நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ. நிறுவனவங்களில் தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்றகப்படுகிறது

இது குறித்து நமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவத:

தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், ஐடிஐ தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை பெற, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவியரிடம் இருந்து வரும், ஜூன் 7 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில், 2 ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் (இருபாலர்) மற்றும் ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் (இருபாலர்) போன்றவற்றிக்கும். பெண்களுக்கு மட்டும் ஓராண்டு பயிற்சியாக, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், 2 பயிற்சியாக, தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 2023ம் ஆண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ‘இண்டஸ்ட்ரி 4.0’ திட்டத்தின் கீழ், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்சார வாகனம் (2ஆண்டு), தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப உற்பத்தி வல்லுனர்கள் (ஒரு ஆண்டு) மேம்பட்ட ‘ஜிஎன்சி’ இயந்திர தொழில்நுட்ப வல்லுனர்கள் (2 ஆண்டு) போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிந்த பின் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். 10 ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஜ.டி.ஜ., பயிற்சி முடித்தவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை மூலம் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிகளில் சேர www.skilltraining.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நாமக்கல் அரசு ஐ.டி.ஐ., கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ., -க்கு நேரில் வந்தும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் வரும் ஜூன் 7 ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!