அண்ணா பிறந்த நாள்: பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி, மறைந்த முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடைபெறுகிறது. இதில், 13, 15 மற்றும் 17 என வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவாக போட்டி நடைபெறும். 13 வயதிற்குள் மாணவர்களுக்கு 15 கி.மீ., மற்றும் மாணவியர்களுக்கு 10 கி.மீ., என போட்டி நடைபெறும். இப்போட்டி கலெக்டர் ஆபீசில் இருந்து துவங்கி வேலகவுண்டம்பட்டி வரை நடைபெறும்.
15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மற்றும் மாணவியருக்கு 15 கி.மீ., தொலைவு என கலெக்டர் ஆபீசில் துவங்கி மாணிக்கம்பாளையம் வரை நடைபெறும். இப்போட்டியில் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது சொந்த செலவில் சைக்கிள்களை கொண்டு வர வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் டிஎஸ்ஓஎன்எம்அட்ஜிமெயில்.காம் என்ற இமெயில் அல்லது 7401703492 மற்றும் 9566813691 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu