நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு இந்த ஆண்டில் 38 நாட்கள் அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்ய வாய்ப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர்
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, நடப்பு 2024ம் ஆண்டில் இன்னும் 38 நாட்கள், பக்தர்கள் அபிசேகம் முன்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்.
ஆஞ்சநேயருக்கு கட்டளைதாரரர் மூலம் தினசரி காலை 9 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள், சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பகல் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
சுவாமிக்கு வடைமாலை சாத்துபடி மற்றும் அபிசேகம், நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முடிவில், பக்தர்கள் அடுத்த ஆண்டிற்கான அபிசேகத்திற்கு முன்பதிவு செய்து கலந்துகொள்வார்கள்.
இந்த 2024ம் ஆண்டில் மேலும், 38 நாட்கள் ஆஞ்சநேயர் அபிஷேகத்திற்கான முன்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. செப். 24ம் தேதி, அக்டோபர் மாதத்தில், 1,3,10,11,15,16,17,18,23,24,25,28,29,30 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்து அபிசேகம் செய்யலாம். நவம்பர் மாதத்தில் 4, 5, 8, 11, 14, 15, 18, 20, 21, 22, 25, 28 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதத்தில் 2, 5, 6 ஆகிய தேதிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து அபிஷேகத்தில் கட்டளைதாரர்களாக கலந்துகொள்ளலாம், என திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu