பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம் துவக்கம்!

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம் துவக்கம்!

பட விளக்கம் : ராசிபுரம் வி.நகர் நகாட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, ஆதார் பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார். அருகில் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் முகாம் நாமக்கல்லில் துவங்கியது.

ராசிபுரம் வி.நகர் நகாட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, ஆதார் பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார். அருகில் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம் துவக்கம்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில், 17 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 50,00 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பள்ளிக்கல்வித் துறையில் மாணவ, மாணவியர் கல்வி பயில உதவும் வகையில், கல்வி உதவித்தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. உதவி மற்றும் ஊக்கத்தொகை நேரடி பயனாளர் பரிமாற்றம் மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. புதிதாக வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அப்பள்ளிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ‘படிக்கும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ திட்ட முகாம் துவக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 17 பள்ளிகளில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் ஆதார் எண் இல்லாத 4,772 மாணவ, மாணவியர், புதுப்பித்தல் தேவை உள்ள, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர்.

தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும், 6 மற்றும் 7 வயது உள்ள குழந்தைகளுக்கும், 16 மற்றும் 17 வயதுடைய மாணவர்களுக்கும் இலவசமாக இச்சேவை வழங்கப்படும். தனியார் பள்ளியில், 8 முதல், 15 வயதுடைய மாணவர்களுக்கு புதுப்பித்தல் மேற்கொள்வதற்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story