மாற்றுத்திறனாளி மனு கொடுத்ததும் புதிய 3 சக்கர சைக்கிள்: எம்.பி. வழங்கல்

மாற்றுத்திறனாளி மனு கொடுத்ததும் புதிய 3 சக்கர சைக்கிள்: எம்.பி. வழங்கல்

புதுச்சத்திரம் பகுதியில், 3 சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்த முதியவருக்கு, எம்.பி. மாதேஸ்வரன் உடனடியாக புதிய சைக்கிளை வழங்கினார்.

புதுச்சத்திரம் பகுதியில் 3 சக்கர சைக்கிள் கேட்டு, கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு மாதேஸ்வரன் எம்.பி. உடனடியாக புதிய 3 சக்கர சைக்கிளை வழங்கி உதவினார்.

புதுச்சத்திரம் பகுதியில் 3 சக்கர சைக்கிள் கேட்டு, கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு, மாதேஸ்வரன் எம்.பி. உடனடியாக புதிய 3 சக்கர சைக்கிள் வழங்கி உதவினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பியாக வெற்றிபெற்ற, மாதேஸ்வரன், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அவர், நாட்டாமங்கலம் அருந்ததியர் காலணி பகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, முத்தம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்ற வயதான மாற்றுத்திறனாளி தனது மூன்று சக்கர சைக்கிள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதை ஓட்ட முடியவில்லை. இதனால் நான் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே எனக்கு புதிய மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று, எம்.பி. மாதேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அவரது மனுனை பரிசீலனை செய்து எம்.பி. மாதேஸ்வரன், உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, முதியவரின் நிலைமையை எடுத்துக் கூறி உடனடியாக அவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்க நடவிடக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற கலெக்டர் உமா, சமூக நலத்துறை மூலம் உடனடியாக ஒரு புதிய 3 சக்கர சைக்கிளை வழங்கினார். முதியவர் கோரிக்கை விடுத்த 2 மாணி நேரத்தில் மாதேஸ்வரன் அவருக்கு புதிய 3 சக்கர சைக்கிளை நேரில் வழங்கினார். இதையொட்டி முதியவர் ரங்கசாமி, எம்.பி. மாதேஸ்வரனுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி தெரிவித்தார்.

சைக்கிள் வழங்கிய நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் திமுக ஒன்றிய செயலாளர் கவுதம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் துரை, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன்,

பொருளாளர் மணி, இளைஞர் அணி செயலாளர் பிரதீஸ்வரன் உள்ளிட்ட திமுக மற்றும் கொமதேக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story